தமிழகம்

விதிகளை மீறி இயக்கப்பட்ட 27,427 வாகனங்கள் சிறைப்பிடிப்பு

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் விதிகளை மீறி இயக்கப்பட்ட 27,427 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-14ம் ஆண்டில் 13,25,326 வாகனங்கள் செயலாக்கப் பணியாளர்கள் மூலமாக தணிக்கை செய்யப்பட்டு அவற்றில் 1,76,983 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வரியாக ரூ.28.01 கோடியும், இணக்கக் கட்டண மாக ரூ.63.79 கோடியும் வசூலிக்கப் பட்டன.

விதிகளை மீறி இயக்கப்பட்ட 27,427 வாகனங்கள் சிறைபிடிக் கப்பட்டுள்ளன. 15,713 வாகனங் களுக்கு தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் இயக்கிய 29,623 வாகனங்கள், சிகப்பு பிரதிபலிப்பான்கள் இல்லாமல் இயக்கிய 21,103 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக வேகத்தில் சென்ற 1,294 வாகனங்கள், அதிக கட்டணம் வசூலித்த 2,090 ஆட்டோக்கள், காற்று ஒலிப்பான் கள் பயன்படுத்திய 13,443 வாகனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 834 பேர் மீதும், அதிக குழந்தை களை ஏற்றி சென்ற 1,865 பள்ளி வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT