ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ சேர்மன் பிஆர்ஆர் பிறந்த நாள் நினைவு ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார். 
தமிழகம்

ராஜபாளையத்தில் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ சேர்மன் ‘குரு பக்தமணி’ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா 88-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

ராஜபாளையத்தில் உள்ள பிஆர்ஆர் நினைவிடத்தில் நடைபெற்ற கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, அவரது மகன் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

ஜோதி ஓட்டம்: அதன்பின் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதீ வேத பாடசாலையில் உள்ள ‘ஸ்ரீ தர்மரக்ஷகர்’ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா உருவச் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, நினைவு ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் தொடங்கி வைத்தார்.

நினைவு ஜோதி ஊர்வலம் ஸ்ரீ சாரதாம்பாள் கோயில், ராமமந்திரம் இல்லம் வழியாகச் சென்று ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்தில் நிறைவடைந்தது. அங்கு நினைவு ஜோதி ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ராஜபாளையத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் மண்டபத்தில் கர்நாடாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT