தமிழகம்

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது: குறைந்த அளவே வந்ததால் மக்கள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது. குறைந்த அளவேவந்ததால், பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழகத்தில் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.140 வரைஉயர்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, விலை கட்டுப்படுத்தும் நிதியம் மூலம், தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்தது.

தமிழகம் முழுவதும் உள்ள 62 பண்ணை பசுமை கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளிகிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்து, கடந்த வாரம் விற்பனை தொடங்கப்பட்டது. அதன்பிறகும் விலை குறையாத நிலையில், ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார்.

6 ஆயிரம் கிலோ விற்பனை: அதன்படி, முதல்கட்டமாக சென்னையில்உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளிவிற்பனை நேற்று தொடங்கியது. ஒரு கிலோரூ.60-க்கு விற்கப்பட்டது. ஆனால், ஒருகடைக்கு 14 கிலோ அளவில் ஒன்றுஅல்லது இரண்டு பெட்டிகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால், ரேஷன் கடைகளுக்கு வந்த பெரும்பாலான மக்கள் தக்காளி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறையினர்கூறும்போது, ‘‘தக்காளி குறைந்த அளவே,அதாவது 6 ஆயிரம் கிலோ அளவுக்கேமுதல் நாளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT