தமிழகம்

தமிழகத்தில் 36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: பதிவுத்துறையில் நிர்வாக காரணங்கள் அடிப்படையில், சென்னைஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 மாவட்ட பதிவாளர்களை இடமாற்றம் செய்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தி.நகர் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சார்பதிவாளர் கே.செந்தில்நாதன், தஞ்சை மாவட்ட பதிவாளராகவும், செய்யாறு மாவட்ட பதிவாளர்ஜி.அறிவழகன், செங்கல்பட்டுக்கும், வடசென்னை மாவட்ட பதிவாளர் ஏ.கலைச்செல்வி செய்யாறுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறாக மொத்தம் 36 மாவட்டப் பதிவாளர்கள் தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT