தமிழகம்

சிதம்பரம் கோயில் விவகாரம் | இந்து சமய அறநிலையத்துறைக்கு பாஜக மனு

செய்திப்பிரிவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரனிடம், பாஜகவினர் அளித்த மனுவின் விவரம்: சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது, உயர் நீதிமன்றகருத்துக்கு மாறாக உள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பில் கடலூர் ஆட்சியர், அறநிலையத் துறை செயலாளர் மற்றும் தீட்சிதர்களின் பொதுச் செயலாளர் ஆலோசித்து முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அரசாணை வெளியிட்டது ஏற்புடையதல்ல.

இது நீதிமன்ற அவமதிப்பு. எனவே, அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT