தமிழகம்

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

சென்னை: மெட்ராஸ் பார் அசோசியேஷன் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரிய வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷனில் தண்ணீர் குடிக்க சென்ற இளம் வழக்கறிஞரை மூத்த வழக்கறிஞர் ஒருவர் தடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மெட்ராஸ் பார் அசோசியேஷனில் சாதி, மத, இன, பொருளாதார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும், மேலும் இரு வழக்கறிஞர்களை இந்த அசோசியேஷனில் சேர்க்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ரிட் வழக்கு தொடர முடியாது என்பதால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள்,மெட்ராஸ் பார் அசோசியேஷன் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜூலை 14-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT