தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசலைப் பூர்வீகமாகக் கொண்டவர் லட்சுமி நிஷா. இவர் திருப்பூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், லட்சுமி நிஷாவின் தாத்தா மாணிக்க பிள்ளையின் பூர்வீக சொத்தை விற்பனை செய்ததில் கிடைத்த தொகையான ரூ.20 லட்சத்தை மேயர் சண்.ராமநாதனிடம், லட்சுமி நிஷா- பாலாஜி தம்பதி அண்மையில் வழங்கினர். ஆணையர் சரவணக்குமார் உடனிருந்தார். இது தொடர்பாக லட்சுமி நிஷா கூறியது: எனது தாத்தா மாணிக்கம் பிள்ளை, ஏழைகளுக்கு உதவி செய்தவர்,
அவர் உயிரிழந்த பின்னர், திருப்பூரைச் சேர்ந்த பாலாஜியை திருமணம் செய்து கொண்டு நான் அங்கேயே தங்கியுள்ளேன். இந்நிலையில், இங்குள்ள எனது தாத்தாவின் சொத்தை பராமரிக்க முடியாததால், அந்த சொத்தை விற்பனை செய்ததில் கிடைத்த தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படும் எரிவாயு தகன மேடை பராமரிப்பு செலவுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.