தமிழகம்

சென்னை மெட்ரோ சார்பில் மினி பஸ், ஆட்டோ இணைப்பு சேவை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையப் பயணிகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்குப் பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். மாநகரப் போக்குவரத்துக் கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படும்.

SCROLL FOR NEXT