அப்பாவு | கோப்புப் படம் 
தமிழகம்

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: "அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை" என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் தகுதி ஆளுநரு க்கு இல்லை என்பதை, நான்கரை மணி நேரத்தில் ஆளுநர் உணர்ந்து ள்ளார். முரளி மனோகர் ஜோஷி, அத்வானி ஆகியோர் பதவியில் இருக்கும்போதுதான் ராமர் கோயில் இடிப்பு வழக்கை சந்தித்தனர்.

ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும்தான் ஆளுநருக்கு உள்ளது. யார், யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற பட்டியலை ஆளுநருக்கு கொடுத்தால், அதனை ஏற்று ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது அவர்களை பதவியை விட்டு முதல்வர் நீக்கலாம். அமைச்சர் பதவியில் இருந்து யாரையும் ஆளுநர் நீக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குமேல் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை ஆளுநருக்கு கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஆளுநரின் பதவிக்கு மாண்பையும் தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT