தமிழகம்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களாக திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் வியாழக்கிழமை கிளம்பி, வெள்ளிக் கிழமை பொள்ளாச்சி வந்து, மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட்டது.

அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி,பொள்ளாச்சி வழியாக மீண்டும் திருநெல்வேலிக்கு சனிக் கிழமை சென்றடைந்தது. தற்போது ஜூலை 2-ம் தேதி முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் இயக்கப்படும் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் கிளம்பும் சிறப்பு ரயில், திங்கள் காலை 4.45 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும். அதன் பின் 4.47 மணிக்கு கிளம்பி மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் திங்கள் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பும் ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10.03 மணிக்கு வந்து, 10.05-க்கு கிளம்பும்.

செவ்வாய்க் கிழமை காலை 7.45 மணிக்கு இந்த ரயில் திருநெல்வேலி சென்றடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ரயில் நிலையங்களில் நின்று செல்லும், என்றனர்.

SCROLL FOR NEXT