சந்தீப் ராய் ரத்தோர் 
தமிழகம்

சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய காவல் துறை தலைவராக (DGP) நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தமிழக காவல் துறையின் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் - யார் இவர்?

SCROLL FOR NEXT