தமிழகம்

பாதிரியாரை தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை - ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலியில் பாதிரியாரைத் தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி சிஎஸ்ஐ திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை திமுக எம்.பிஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப்காட்பிரே நோபிள் பாதிக்கப்பட்டதும், வீடியோ காட்சிகளாக நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியானது,

ஒரு எம்.பியே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும்கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் மீதுள்ள நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்துவிட்டனர்.

திமுக எம்.பி உட்பட 33 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டி ருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, திமுக எம்.பி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT