விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 
தமிழகம்

காவல்துறை சார்பில் நடத்தப்படும் குறைதீர் கூட்டத்தின் நோக்கம் என்ன?

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் வாரத்திற்கு ஒரு முறை புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் குறைதீர் முகாம் நடத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் நேரில் மனு அளித்து வருகின்றனர். “சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒரு சார்பாக விசாரணை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டாலோ, புகார்தாரரையே குற்றவாளியாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அவர்கள் இங்கு வந்து தங்கள் பக்கத்து நியாயத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கின்றனர். அதனை இக்கூட்டத்தில் உள்ள உதவி காவல் ஆய்வாளர்கள் விசாரிப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஒருதலைபட்சமாக செயல்பட்ட விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குறைதீர் கூட்டத்தில் எவ்விதமுறைகேடுகளும் நடைபெற வாய்ப்பேஇல்லை. ஒவ்வொரு வாரமும் சுமார்200 மனுக்கள் பெறப்பட்டு அன்றே180 மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. மீதமுள்ள 20 மனுக்கள் சிவில் தொடர்புடையவை என்பதால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணும்படி அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறோம்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT