சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள உள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை மேயர் பிரியா சந்திதார். அப்போது அவர் கூறுகையில், "முதல்வரின் ஆலோசனைப்படி சென்னை மாநகராட்சியில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்று அறிவியல் துறை சார்ந்த 1186 மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள். தொடர்ந்து நாளை கணினி அறிவியல் துறை சார்ந்த 950 மாணவர்களுக்கு தனியாக நிகழ்ச்சி நடக்க உள்ளது.
சென்னை மாநகராட்சியில் புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த 10 வருட ஆட்சியில் சீரமைக்கபடாமல் இருந்தது. விரைவில் அதன் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சரியாக இல்லை என்றால் அதனை கண்டறிந்து நிர்பயா திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போதும் கழிவறைகளையும் ஆய்வு செய்து வருகிறேன். சிட்டீஸ் நிதி மூலமாக பள்ளிகளை 28 பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று. மாநகராட்சி பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து கொண்டு உள்ளனர்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், சிங்கார சென்னை திட்டத்தில் நிதியின் கீழ் முதல் பகுதியில் 97 சதவீதம் முடிந்ததுள்ளது. உட்டகட்டமைப்பு நிதியை பொறுத்தவரை 98 சதவீதம் முடிந்தது. கொசஸ்தலை ஆறு பெரிய திட்டம் என்பதால் 2024 ல் பிப்ரவரியில் தான். கோவளத்தில் புதிய திட்டப் பணிகளை எடுக்கப்பட்டுள்ளது. மண்டலம் 12, 14,15 ல் இப்போதுதான் மழைநீர் வடிகால் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இது ஒன்றரை ஆண்டு திட்டம் என்பதால் கால தாமதம் ஆகும். ஆனாலும், பருவ மழை நாட்களில் மாற்று திட்டம் வைத்திருக்கிறோம்.
மடிப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் மெட்ரோ பணிகள், பொதுப் பணித்துறை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட சில பணிகள் நடந்து வருவதால் சாலைகள் அமைத்தாலும், மீண்டும் அதை சேதமடைகிறது. ஆனாலும் தேவைப்படும் இடங்களில் நடவடிக்கை எடுக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.