அரூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைத்த 3 மாதத்திலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. 
தமிழகம்

அரூரில் சாலை அமைத்த 3 மாதங்களிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

செய்திப்பிரிவு

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை தரமில்லாததால் 3 மாதத்திலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகேசன் என்பவர் `இந்து தமிழ் திசை-உங்கள் குரல்' பகுதியில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: அரூர் பேருந்து நிலையத்திலிருந்து 4, 5, 6, 7 ஆகிய பேரூராட்சி வார்டுகள் வழியாக தீர்த்தமலைக்கு சாலை அமைந்துள்ளது. அரூர் நகரில் இருந்து சிட்லிங், நரிப்பள்ளி, கோட்டப் பட்டி, தீர்த்தமலை, பையர்நாயக்கன் பட்டி, செல்லம்பட்டி, வேப்பம்பட்டி, வேட கட்டமடுவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக் கணக்கா னோர் இந்த சாலை யில் பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக கார்கள்,சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் இந்த சாலையில் பயணிக்கின்றனர். இந்நிலையில் பல வருடங்களாக குண்டும், குழியுமாக இரு ந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பலமுறை கோரிக்கை விடப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சிமென்ட் சாலை அமைத்து 3 மாதங்களே ஆன நிலையில் தற்போது ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சேதமடைந் துள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் குறைந்த காலத்திலேயே சேதமடைந்துள்ளது. மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடை வதற்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT