மருத்துவ முகாம் 
தமிழகம்

கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயன்

செய்திப்பிரிவு

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று 103 இடங்களில் நடைபெற்ற பன்னோக்கு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 103 இடங்களில் பன்னோக்கு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 1,88,885 பேர் பதிவு செய்து பல்வேறு சோதனைகள் செய்து கொண்டு உள்ளனர். இதன்விவரம்:

  • நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் எனும் இரண்டு நோய்களுக்காக பரிசோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,15,048
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 14,471
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 4,056
  • ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 19,217
  • ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 5,576
  • நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தநோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 8,333
  • நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் என்று இரண்டும் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 2,005
  • கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 7,849
  • கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதித்ததில் அறிகுறி உள்ளவர்கள் – 762
  • மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 8,712
  • மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையில் அறிகுறி உள்ளவர்கள் – 1,176
  • ரத்த சோகை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 44,165
  • பரிசோதனையில் இரத்த சோகை கண்டறியப்பட்டவர்கள் – 5,492
  • சிறுநீரக செயல்பாட்டினை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 28,553
  • பரிசோதனையில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் – 785
  • ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 28,658
  • ரத்த பரிசோதனையில் இரத்த கொழுப்பு அதிகம் கண்டறியப்பட்டவர்கள் – 1,299
  • காசநோய் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 12,817
  • சளி பரிசோதனைக்கான மாதிரிகள் எண்ணிக்கை – 4,366
  • பரிசோதனையில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 289
  • தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 12,591
  • தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டதில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 133
  • தொழுநோய் பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 14
  • கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 936
  • பல் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 13,685
  • பல் பரிசோதனை முடிந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 1,565
  • இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 14,894
  • இ.சி.ஜி. பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் – 1,238
  • எகோ பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 7,020
  • எகோ பரிசோதனையில் பாதிப்பு கண்டறிய்ப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் – 715
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் – 13,125
  • தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு கண் கண்ணாடி பெறப்பட்டவர்களின் எண்ணிக்கை – 3,852
SCROLL FOR NEXT