வி.பி.சிங் மற்றும் கருணாநிதி 
தமிழகம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் வி.பி. சிங்: முதல்வர் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தவர் வி.பி. சிங் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூகநீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் "இட ஒதுக்கீடு எங்கள் உரிமை" என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர். வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி. சிங்கும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள். வி.பி. சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT