தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் அதிபட்சமாக 16 செ.மீ மழை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி நேற்று (ஜூன் 18) காலை 8.30 மணி முதல் இன்று (ஜூன் 19) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ, ஆலந்தூர் மற்றும் தரமணியில் தலா 14 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ, கிழக்கு தாம்பரம், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர், சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ, சென்னை கொரட்டூர் மற்றும் எம்ஜிஆர் நகரில் தலா 8 செ.மீ, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT