சென்னை: இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பொழிந்து வருகிறது. புதுச்சேரியிலும் மழை பதிவாகி உள்ளது.