முதல்வர் ஸ்டாலின் (இடது), ராமதாஸ் (வலது) 
தமிழகம்

தந்தையர் தினம் | முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தந்தையர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: "உங்களால் கருவானேன். உங்களால் செதுக்கப்பட்டேன். நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ்: "ஆயிரமாயிரம் அதிர்வுகளையும், பூகம்பங்களையும் தாங்கிக் கொண்டு விதைகளில் இருந்து துளிர்களை எடுத்து வளர வைக்கும் பூமியைப் போன்று தங்கள் வாழ்வின் துயரங்களையும், இடிகளையும் மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டு, தம் பிள்ளைகளின் வெற்றிக்காகவும், உயர்வுக்காகவும் உழைப்பவர்கள் தான் தந்தையர்கள். அவர்கள் ஒளிரும் ஆடைகளையும், மின்னும் நகைகளையும் அணியத் தெரியாத மிரட்டலுடன் கூடிய அரவணைப்பை மட்டுமே தரத் தெரிந்த ஆண் தேவதைகள். அவர்களைப் போற்றுங்கள்... அவர்களை முன்னோடியாகக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் உலக தந்தையர் தினம், ஜூன் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளவில் தந்தைக்கு அவர்களது பிள்ளைகள், இந்த தினத்தில் மரியாதை செலுத்தி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தந்தையர் தின வாழ்த்துகளை பிரபலங்கள் பலரும் சமூக ஊடங்களிலும், வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT