சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எம்.அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.அமிர்த ஜோதி, அச்சு மற்றும் எழுது பொருள் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த எம்.அருணா, சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.