மாணவர்களுடன் நடிகர் விஜய் 
தமிழகம்

விழா அரங்கில் மாணவர்கள், பெற்றோர்களுடன் அமர்ந்த நடிகர் விஜய்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் என பெருமளவில் திரண்டுள்ளனர். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது விழாவில் பங்கேற்ற விஜய் மேடைக்கு கீழே இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் அமர்ந்து கொண்டார். அதோடு தனது ரசிகர்கள், மாணவர்கள் தனக்குக் கொடுத்த அன்புப் பரிசையும் பெற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT