தமிழகம்

மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் இன்று மாலை கோவையில் கண்டன கூட்டம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர் மாவட்டம்), தொ.அ.ரவி (வடக்கு மாவட்டம்), தளபதி முருகேசன் (தெற்கு மாவட்டம்) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (ஜூன் 16) மாலை 5 மணிக்கு சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் திருமாவளவன், திராவிடர் கழகம் தலைவர் வீரமணி, கொமதேக ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொஹிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT