சென்னை: சென்னை, கோவை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அரசியல் உதவியாளர் கோகுல் ஆகியோருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே 26-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அபிராமபுரம் ஸ்ரீபதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அரசு ஒப்பந்ததாரரும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளருமான கோகுல் என்பவரது வீட்டுக்கு வருமான வரித்துறை அதி காரிகள் நேற்று சீல் வைத்தனர்.
கோகுல் வீட்டில் இல்லாததால் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் இரண்டு முறை கோகுலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு முறையும் உரிய விளக்கம் அளிக்காததால் வருமான வரித்துறையினர் அவரது வீட்டுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நோட்டீஸில், ‘‘சீல் வைக்கப்பட்ட வீட்டிலுள்ள ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் தொடக்கூடாது’’ என குறிப்பிடப்பட் டுள்ளது.