தாம்பரம்: தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத் துவமனையில் காச நோய் சிகிச்சை மையத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தாம்பரம், சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ.1.30 கோடி செலவில், 12 படுக்கை வசதி கொண்ட ஆண் பிரிவு, 12 படுக்கை வசதி கொண்ட பெண் பிரிவு என, 24 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய காச நோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டது. இம்மையத்தை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: இம்மருத்துவமனை தொடங்கப் பட்டு, 95 ஆண்டுகள் நிறைவு பெற்றி ருந்தாலும், எப்போதுமே இல்லாத அளவுக்கு இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இம்மருத்துவமனையில், இன்னும் ஐந்தாண்டுகளில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
அதில் தமிழ்நாடு முதல்வர் பங்கேற்பார். 2025-க் குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையை மேம் படுத்தி தரம் உயர்த்துவதற்கு, முதல் வர் தயாராக உள்ளார். ஏறத்தாழ 100-க் கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியோடு காச நோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறு மாத புரதசத்து உடன் கூடிய உணவுப் பொருட்களை தரும் முயற்சி தமிழ் நாட்டில் மிகச் சிறப்பாக செய்யப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.