பள்ளிகள் திறப்பு 
தமிழகம்

மாணவர்கள் தம் வாழ்வில் வெற்றிபெற உறுதுணையாக இருப்பேன் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற நான் உறுதுணையாக இருப்பேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்! நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT