தமிழகம்

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: 5 பேர் பலி

செய்திப்பிரிவு

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி ஆகினர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கார், நிலை தடுமாறி, எதிர் பாதையில் நின்றது. அப்போது சாலையின் மறுபுறத்திலிருந்து வந்த மற்றொரு கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் பலியாயினர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT