தடம் புரண்ட மின்சார ரயில் 
தமிழகம்

சென்னை: பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்

செய்திப்பிரிவு

சென்னை: சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது.

சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் முனையத்தில் இருந்து திருவள்ளூருக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் சென்ற மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது. இதையடுத்து, தடம் புரண்ட இடத்தில் சீரமைப்புப் பணிகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தடம் புரண்ட கடைசி 2 பெட்டிகள் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT