தமிழகம்

கேரள மாணவர்களைத் தாக்கி ரூ.70 லட்சம் பறிப்பு?

செய்திப்பிரிவு

காரில் சென்ற கேரளாவைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு ரூ.70 லட்சம் பறித்துச் சென்றதாகக் காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள் முகமது ரஷித்(21). ரியாஷ்(21). இருவரும் கோழிக் கோட்டில் உள்ள கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் படித்து வருகின்றனர்.

இவர்கள் சனிக்கிழமை நள்ளிரவு சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ஸ்விப்ட் காரில் (எண்- kl65C9142) சென்றனர். கோவை மாவட்டம், அரசூர் தென் னம்பாளையம் அருகே வந்த போது, இன்னோவாவில் வந்த மர்ம நபர்கள் சிலர், இரு மாணவர் களையும் வழிமறித்து தாக்கிய தாகக் கூறப்படுகிறது. மேலும் காரில் வைத்திருந்த ரூ.70 லட் சத்தை பறித்துச் சென்றனராம்.

பணம் பறித்த கும்பல், மாணவர் களின் காரை எடுத்துக் கொண்டு தப்பியது.இக்காரை திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் சேதப் படுத்தி நிறுத்திவிட்டு, வழிப்பறிக் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.

இது குறித்து ரஷித், முகமது ரியாஷ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்டம், சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில், காவல் துறையினர் விசார ணையைத் தொடங்கியுள்ளனர்.

இதில் முரண்பட்ட தகவல்கள் வெளியானதாகக் காவல் துறையி னர் தெரிவிக்கின்றனர். மேலும், கல்லூரி மாணவர்கள் 2 பேர் சொல்லும் தொகையில் முரண்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அவர் கூறியபோது, பணம் பறித்த கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எவ்வளவு தொகை என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை என்றார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள விஷயங்கள் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரிக் கின்றனர்.

SCROLL FOR NEXT