புதுச்சேரி: புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் நோணாங்குப்பம் படகு குழாம், சீகல்ஸ் உணவகம், ஊசுட்டேரி படகு குழாம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இந்த வளர்ச்சிக் கழகத்தில் 180 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. மதிய உணவுக்காக மாதத்திற்கு ரூ.2 லட்சம் செலவாகிறது.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படுவதை கருத்தில் கொண்டு மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளதாக கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் மதிய உணவுக்கு செல்ல சுழற்சி முறையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.