திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்த நெய்வேலி அன்னை சத்யா நகரை சேர்ந்த குப்பன் மகள் சாமுண்டீஸ்வரி(22). திருவள்ளூர் அருகே உள்ள மண வாள நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார்.
இவர் திங்கள்கிழமை மதியம் தன் வீட்டருகே உள்ள புதர் பகுதிக்குச் சென்றார். நீண்ட நேரம் வீடு திரும்பாத சாமுண்டீஸ் வரி, திங்கள்கிழமை மாலை புதர் பகுதியில், மர்ம நபர்களால், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து பென்னலூர்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணை யில், சாமுண்டீஸ்வரியின் காதல ரான நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜ் குமார்(24), அவரது சகோதரர் ஸ்டீபன்ராஜ் என்கிற தேவ குமார்(26) ஆகிய இருவரும் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜ்குமார், தேவகுமார் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்து, போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தாவது: சாமுண்டீஸ்வரியும், ராஜ் குமாரும் கடந்த நான்கு ஆண்டு களாக காதலித்து வந்துள்ளனர். “தன்னை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என கூறி, ராஜ்குமாரை, சாமுண்டீஸ் வரி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார், பொருளா தாரத்தில் பின்தங்கிய குடும்பத் தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரியை திருமணம் செய்துகொள்ள தயங்கி வந்தார். எனவே, சாமுண் டீஸ்வரியின் தொந்தரவை தாங்க முடியாத ராஜ்குமார், சாமுண் டீஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன் படி, செல்போனில் சாமுண்டீஸ் வரியை தொடர்பு கொண்ட ராஜ் குமார், புதர் பகுதிக்கு சாமுண் டீஸ்வரியை வரவழைத்து, தன் சகோதரர் தேவ குமாரோடு சேர்ந்து, தலையில் கல்லை போட்டு சாமுண்டீஸ்வரியை கொலை செய்துள்ளார். இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.