தமிழகம்

கருணாநிதி நூற்றாண்டு விழா: திமுகவின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திமுகவின் புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திமுகவின் புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT