சிஏஜி | கோப்புப் படம் 
தமிழகம்

கணக்கு தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் வழங்கினார் சிஏஜி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை ஆளுநரிடம் முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி வழங்கினார்.

இது தொடர்பாக முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி சி.நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2022- மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழக அரசின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி நேற்று (07.06.2023) தமிழக ஆளுநரிடம் அளித்தார்.

இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி, தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க இந்திய அரசியல் சட்டம் பிரிவு 151(2) வகை செய்கிறது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT