தமிழகம்

இரண்டு வாரங்களுக்கு வயிற்றுப்போக்குத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதை தடுக்க, தீவிர வயிற்றுப்போக்குத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் சுகாதார அலுவலர்கள் நிலையில் கூட்டங்கள் நடத்தப்படும். அவர்களின் கண்காணிப்பின்கீழ் குறைந்த எடை குழந்தைகள் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT