தமிழகம்

கூடங்குளம் போராட்ட குழுவினர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: புதிய அணு உலை அமைக்க எதிர்ப்பு

செய்திப்பிரிவு

கூடங்குளம் போராட்டக் குழு வினர், மத்திய அமைச்சர்களை நாளை சந்தித்து புதிய அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

இதுகுறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த மில்ரெட், சென்னையில் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதாவை 2011-ம் ஆண்டு சந்தித்தபோது, கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கப்படாது என்று உறுதியளித்தார். ஆனால், தற்போது அவற்றை அமைப் பதற்கான பணிகள் நடந்து வரு கின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த மாதம் கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கூட தரப்பட வில்லை.

தற்போது முதல்வரை சந்திக்க அனுமதி கோரினோம். அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயமார், முகிலன், மைபாசேசுராஜ், மில்ரெட், அபிலா, மலர், சகாயஇனிதா ஆகியோர் 7-ம் தேதி (நாளை) டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரை சந்தித்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT