தமிழகம்

இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய 2 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு, அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், கடந்த மாதம் 18ம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அவருடைய அலுவலகத்தில் படுகொலை செய் யப்பட்டார். இந்த வழக்கில் கொலை யாளிகளை பிடிக்க போலீசார் 7 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுரேஷ்குமாரை கொல்வதற்கு வெளியூரில் இருந்து சிலர் வந்தது உறுதியாகி உள்ளது. அவர்களை கைது செய்ய நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் கேரள எல்லையோரம் உள்ள சில கிராமங்களில் போலீஸார் முகாமிட்டுள்ளனர்.

வெளியூரை சேர்ந்த கொலைகாரர்களுக்கு உள்ளூரில் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை பாடியை சேர்ந்த நசீர் (28), அலாவுதீன் (32) ஆகியோர் உதவியது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும்தான், கொலையாளிகளுக்கு சுரேஷ் குமாரை அடையாளம் காட்டி உள்ளனர். அவர்களை தங்கள் வீடுகளிலேயே தங்க வைத்துள்ளனர். மேலும் சுரேஷ்குமாரின் நடமாட்டத்தை கண்காணிக்க கொலையாளிகளுடன் இருவரும் வந்துள்ளனர். எந்த இடத்தில் வெட்ட வேண்டும்? எந்த சாலை வழியாக தப்பிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு கொடுத்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் போலீ ஸாருக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் நசீர், அலாவுதீன் ஆகியோரிடம் விசா ரணை நடந்து வருகிறது.

விசாரணையில் வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாகவும், கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் போலீஸார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT