சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக, திருநங்கைகள் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி, அண்ணாநகர் அடுத்த திருமங்கலத்தில் நேற்று நடத்தப்பட்டது. 
தமிழகம்

சென்னை | திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, சர்வதேச ரோட்டரி மாவட்டம்-3232உடன் இணைந்து திருநங்கைகள் மூலம், சென்னை நகரின் பல்வேறு சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

சிவப்பு சிக்னலில் நிற்கும் போது வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் உள்ளது.

இந்நிகழ்ச்சியில், 6 திருநங்கைகள்கொண்ட குழுவினர் ஏர் ஹோஸ்டஸ் உடை அணிந்து சீட்பெல்ட், தலைக் கவசம்அணிவதன் முக்கியத்துவத்தை கை சிக்னல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை போக்குவரத்து துணை ஆணையர் வடக்கு சரவணன்,ரோட்டரி சங்கத்தின் சாலைப் பாதுகாப்புக்கான மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், திருநங்கைகள் அதிகாரமளித்தல் மாவட்ட தலைவர் ருக்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT