சிறைவாசிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றியமைக்கும் திட்டத்தை நேற்று சென்னை, புழல் மத்திய சிறையில் சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில், சிறைத் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

சிறைவாசிகளின் உணவு முறை, அளவு மாற்றியமைக்கும் திட்டம் அறிமுகம்: புழல் மத்திய சிறையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: சிறைவாசிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றியமைக்கும் திட்டத்தை நேற்று சென்னை, புழல் மத்திய சிறையில் சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நடந்த சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவில் மாற்றியமைக்கப்படும் என, தமிழ்நாடு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று சட்டத்துறை அமைச்சர் எஸ்,ரகுபதி, புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு, புதிய உணவுமுறை மற்றும் உணவின் அளவை மாற்றியமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நிகழ்வில், சிறைத் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, டிஐஜிகளான கனகராஜ், முருகேசன் மற்றும் புழல் மத்திய சிறை கண்காணிப்பாளர்களான கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT