கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 
தமிழகம்

கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னதாக, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இவரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT