தமிழகம்

4 சவரனுக்காக பாட்டியை கொன்ற பேரன் கைது: அடகு வைத்து பணமும் பெற்றார்

செய்திப்பிரிவு

4 சவரன் நகைக்காக பாட்டியை கொன்ற பேரனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் இரும்புலி யூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதுரம் (80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகள் சாந்தகுமாரி. கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மகன் சாமுவேல். மதுரம், சாந்தகுமாரி, சாமுவேல் ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வண்டலூர் அருகே கண்டிகை பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சாந்தகுமாரி திங்கள்கிழமை சென்றுவிட்டார். வீட்டில் மதுரமும், சாமுவேலும் மட்டும் இருந்தனர்.

உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சாந்தகுமாரி திங்கள்கிழமை மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மதுரம் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வேறு எந்த பொருட்களிலும் கை வைக்கப்படவில்லை. தாம்பரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த சாமுவேலிடம் விசாரணை நடத்தியபோது அவரது பதில்கள் சந்தேகத்தை வரவழைக்கவே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவரை சோதனை செய்தபோது ரூ.32 ஆயிரம் பணமும் இருந்தது. இந்த பணம் எப்படி கிடைத்தது? என்று கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பாட்டியை கழுத்தை அறுத்து கொன்றதை சாமுவேல் ஒப்புக் கொண்டார். பாட்டி மதுரம் அணிந்திருந்த 4 சவரன் செயினுக்காக இந்த கொலையை செய்திருக்கிறார் சாமுவேல். பாட்டியிடம் இருந்து கொள்ளையடித்த செயினை முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் அடகு நிறுவனத்தில் வைத்து ரூ.32 ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். அந்த பணத் தாலேயே அவர் சிக்கிக் கொண் டார். சாமுவேலை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT