தமிழகம்

தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் பலனில்லை: பொருளாதார குற்றப்பிரிவு மேம்படுத்தப்படுமா?

என்.சன்னாசி

மதுரை: தமிழகத்தில் பொருளாதார குற்ற வழக்குகள் அதிகரிப்பால் காவல்துறையில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன முறைகேடு, பொருளாதார இழப்பு போன்ற வழக்குகளை விசாரிக்க, காவல்துறையில் பொருளாதார குற்றத்தடுப்பு காவல்பிரிவு தனியாகச் செயல்படுகிறது. வழக்கமான காவல் நிலையம் போன்று இல்லாமல் குறிப்பிட்ட சில மாவட் டங்களுக்கு ஒரு காவல் ஆய்வாளர், டிஎஸ்பிகள் பணியாற்றுவது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது. இதனால் புகார்தாரர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காத சூழலும் உரு வானது.

இவற்றை கருத்தில் கொண்டு, 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஆய் வாளர், 3 மாவட்டத்துக்கு ஒரு டிஎஸ்பி நியமிக்கப்பட்டு பணிபுரிந்தனர். ஆனாலும், ராமநாதபுரம் உள்ளிட்ட ஓரிரு டிஎஸ்பிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் தேக்கம் அடைவதாக பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: பொருளாதார இழப்பால் பாதிக்கப்படும் புகார்தாரர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மாவட்டந்தோறும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு தனித்தனியே ஆய் வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவ்வழக்குகளை கையாளும் ராமநாதபுரம் உட்பட ஒரு சில மாவட்டங் களில் டிஎஸ்பிக்களுக்கு தனி அலு வலகம், வாகன வசதி இல்லை. ஆய் வாளர்களுக்கும் வாகன வசதி இல்லை என்ற புகார் உள்ளது. முக்கியத் தேவையெனில் ஆயுதப்படை உயர் அதிகாரி களிடம் வாகனங்களை இரவல் வாங்கி செல்ல வேண்டி உள்ளது.

இதுபோன்ற சூழலால் வழக்குகள் தேக்கம் அடைகின்றன. புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள் ளது. இதனால் பொருளாதார குற்ற பிரிவினருக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்டமைப்பு வசதி: பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறும்போது, அனைத்து மாவட்டத்திலும் இப்பிரிவு காவல் ஆய்வாளர்களுக்கு வாகனம், அலுவலக வசதி உள்ளது. டிஎஸ்பிக்களை பொருத்தவரையிலும் புகார்தாரர்களை அலைய விடக் கூடாது எனக் கருதி, அந்தந்த மாவட்ட காவல் ஆய்வாளர் அலு வலகத்துக்கே சென்று விசாரிப்பது நடைமுறையில் உள்ளது. ஒரு சில இடங் களில் நிறை, குறை இருக்கலாம்.

அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று படிப்படியாக சரி செய்யப்படும். போதிய கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT