தமிழகம்

கொத்தடிமை சிறுவர்கள்: கம்யூனிஸ்டு புகார்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் தொழிலாளர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் ஆறுமுகம் பேசியதாவது:

சிறுவர், சிறுமியரை வெளியே விடாமல் ஆலைக்குள்ளேயே அடைத்து வைத்து, வருடக்கணக் கில் வேலை வாங்கிக்கொண்டு, ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை தரும் ‘சுமங்கலி திட்டம்’ தமிழகத்தில் சில பஞ்சாலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்படி எந்த புகாரும் தமிழக அரசுக்கு வரவில்லை. முன்பு இருந்தது. இப்போது இல்லை. அதைத் தடுக்க அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

சிறுதொழில்கள் துறை அமைச்சர் மோகன்:

சோதனை நடப்பது சரி. ஆனால், தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் இந்த நிலைமை நீடித்து வருகிறது. இதற்காக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மோகன்: எந்த இடம் என்று குறிப்பிட்டுச் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

SCROLL FOR NEXT