தமிழகம்

சென்னையில் இரவு நேர மின்தடையை சரி செய்ய 10 சிறப்பு குழுக்கள், 125 நடமாடும் ரோந்து வாகன சேவை

அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் இரவுநேர மின்தடையை சரி செய்ய, 10 சிறப்பு குழுக்​கள் மற்​றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவையை, மின்​ துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்குமார் தொடங்கி வைத்​தார்.

சென்​னை, அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரிய தலைமைஅலு​வல​கத்​தில், மின்​துறை அமைச்​சர் நிர்​மல் குமார், மின்​வாரிய தலை​வர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், அதிகரித்து வரும் வெப்​பம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் எதிர்​பா​ராத வித​மாக ஏற்​படும் மின்​தடைகளை உடனுக்​குடன் சரிசெய்​யும் வகை​யில், 10 சிறப்பு குழுக்​கள் மற்​றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவை​களை நேற்று தொடங்கி வைத்​தார்.

மேலும், ஏற்​க​னவே செயல்​பாட்​டிலுள்ள 70 மின்தடை நீக்க மையங்​களு​டன் (மின்​னகம் நீங்​கலாக) கூடு​தலாக, தற்​போது, 77 புதிய மின்தடை நீக்க மையங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

கூடு​தலாக, 5 கருவி காப்பு சோதனை சிறப்பு குழுக்​கள் (எம்​.ஆர்​.டி.), உயரழுத்த மின் புதைவட மின் கேபிள் பழுதுகளை உடனுக்​குடன் கண்​டறிந்து சரிசெய்​யும் உபகரணங்​களு​டன் கூடிய 4 சிறப்பு வாக​னங்​களும், உயரழுத்த மற்​றும் அதிஉயரழுத்த மேல்​நிலை கம்​பிகளில் ஏற்​படும் பழுதுகளை உடனுக்​குடன் சரி செய்ய 7 வாக​னங்​களும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்​து, அமைச்​சர் நிர்​மல் குமார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்​னை​யில் ஆங்​காங்கே மின்​சாதனங்​கள் பழுது காரண​மாக மின்​தடை ஏற்​படு​கிறது. ஒரு சில இடங்​களில் தொடர்ந்து பிரச்​சினை வரு​வ​தாக தெரிவிக்​கப்​படு​கிறது.

போர்க்​கால அடிப்​படை​யில் என்​னென்ன செய்ய முடி​யுமோ, அதையெல்​லாம் செய்து வரு​கிறோம். இன்று (நேற்​று) சென்னை முழு​வதும் மின்​தடைக்கு உடனடி தீர்வு வழங்​கக்​கூடிய வகையி​லான 125 ரோந்து வாக​னங்​கள் சேவை தொடங்கப்​பட்​டுள்​ளன.

அனைத்து மண்​டலங்​களி​லும் இரவுநேர ரோந்து பணிக்​காக 125 வாக​னங்​கள் மற்​றும் 500-க்​கும் மேற்​பட்ட பொறி​யாளர்​கள், களப்​பணி​யாளர்​கள் மற்​றும் கேங்​மேன்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதை கண்​காணிக்க 10 உயர்​நிலைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பெரிய வாக​னங்​கள் செல்ல முடி​யாத இடத்​துக்​கு, ஆட்​டோக்​கள் மூலம் சென்று மின்​தடைக்கு நிவர்த்தி செய்யும் வகை​யில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது​வரை நடக்​காத விஷ​யங்​கள் மின்​துறை​யில் சில நாட்​களாக நடை​பெறுகிறது, மின்​மாற்​றிகள் தீப்​பிடித்து எரி​கின்​றன.

அரும்​பாக்​கம் கொடுங்​கையூர், பெரம்​பூர், வில்​லி​வாக்​கம், அம்​பத்​தூர், மடிப்​பாக்​கம் உள்​ளிட்ட பகு​தி​களில் மீண்​டும், மீண்டும் இது போன்ற பிரச்​சினை​கள் நடை​பெறுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்​படுத்த சிலர் எந்த எல்லைக்​கும் செல்​வார்​கள்.

ஆனால், அதையெல்​லாம் எதிர்​கொள்ள தயா​ராக இருக்​கிறோம். மற்​றவர்​களை குற்​றம்​சாட்டி ஆட்சி நடத்த வேண்​டிய அவசி​யம் எங்​களுக்​கு இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT