தமிழகம்

நீட் தேர்வில் 10% ஒதுக்கீடு, இலவச மடிக்கணினி: அதிமுகவின் கல்வித் துறை வாக்குறுதிகள்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்’ என்பது உள்பட கல்விக்கான பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் கல்விக்காக இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

> அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

> உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் STEM Learningமையங்கள் ஏற்படுத்தப்படும்.

> கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட ஆறு முதல் பத்தாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஐந்து பாடங்களுடன், கணினி அறிவியல் சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

          

> மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஏற்க முடியாத சில ஷரத்துகளை குறிப்பிட்டு அவற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

குறிப்பாக இரு மொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஷரத்துகள் ஏற்புடையதல்ல என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் உரிமைகள் அதன் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த வகையான ஷரத்துக்களும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற எங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடிப்போம்.

> கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித் துறையில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

> பருவ கால மாற்றம் குறித்து மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

> அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு உரிய காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.

> மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

> உலக அளவில் புகழ்பெற்ற ஹார்வர்டு, ஆக்ஸ்போர்ட், ஏல், கேம்பிரிட்ஜ், எம்ஐடி போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்.

> தற்போது இயங்கி வரும் நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும். மேலும் ஊர் புற நூலகங்களில் உள்ள நூலகர் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT