கார்த்திகாவை கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார்.

 
தமிழகம்

தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா உட்பட 10 பேர் கைது - பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

தாராபுரம்/சென்னை: முதல்​வரின் பிரச்​சா​ரப் பயணத்​தின்​போது தாராபுரத்​தில் நடை​பெற்ற சாலை மறியல், காவல் நிலைய முற்​றுகை உள்​ளிட்ட பல்​வேறு சம்​பவங்​கள் தொடர்​பாக, நாம் தமிழர் கட்சி சார்​பில் போட்​டி​யிட்ட கார்த்​திகா உட்​பட 8 பேரைத் தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் தொகுதி இடைத்​தேர்​தலின்​போது, கடந்த 4-ம் தேதி முதல்​வர் விஜய் 2-ம் கட்ட பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது, முதல்​வர் செல்​லும் வழி​யில் வைக்​கப்​பட்​டிருந்த நாதக​வின் பிளக்ஸ் பேனர்​களை போலீ​ஸார் அகற்​றியதைக் கண்​டித்து, நாதக வேட்​பாள​ரும், மாநில மகளிர் அணி செய​லா​ள​ரு​மான கார்த்​திகா மற்​றும் நிர்​வாகி​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மேலும், தாராபுரம் காவல்​நிலை​யத்​தையும் முற்​றுகை​யிட்​டனர்.

இது​தொடர்​பான புகார்​களின் அடிப்​படை​யில், கார்த்​திகா, அவரது கணவர் முருக குமாரவேல் உள்​ளிட்ட 11 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இந்​நிலை​யில், கோவை​யில் தனது இல்​லத்​தில் இருந்த கார்த்​திகா, அவரது கணவர் முருக குமாரவேல் ஆகியோரை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், நிர்​வாகி​கள் தென்​காசியை சேர்ந்த இசை மதிவாணன், சஞ்​சய் காந்தி, மூலனூர் கந்​தசாமி, ஷேக்​பரீத், சூர்யா, கோகுல் உள்ளிட்ட 8 பேர் வெவ்​வேறு இடங்​களில் கைது செய்​யப்​பட்​டனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கோவை​யில் கைதான கார்த்​தி​காவை தாராபுரம் அரசு மருத்​து​வ​மனை​யில் மருத்​துவ பரிசோதனைக்​காக போலீ​ஸார் அழைத்து சென்​றனர். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் கார்த்​திகா கூறுகை​யில், “வீட்​டில் இரவு உடையுடன் தூங்​கிக் கொண்​டிருந்த என்​னையும், எனது கணவரை​யும் அதி​காலை 5 மணிக்கு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். எதற்கு கைது செய்​திருக்​கிறார்​கள் என்ற தகவலை கூட தெரி​விக்​க​வில்லை” என்​றார்.

தலைவர்கள் கண்டனம்

நாம் தமிழர் கட்​சி​யினர் கைதுக்கு தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின்: இடைத்​தேர்​தலில் அதி​கார துஷ்பிரயோகத்தை தட்​டிக்​கேட்​டதற்​காக நாதக நிர்​வாகி​களைக் கைது செய்து அலைக்​கழிப்​பது தவெக அரசின் குறுகிய மனப்​பான்​மையை வெளிப்​படுத்து​கிறது. போதை மருந்து கடத்​தல் வழக்​கில் தவெக நிர்​வாகி கைது செய்​யப்​பட்ட சம்​பவத்தை திசைதிருப்​பும் நோக்​கில் இத்​தகைய நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: மாநிலம் முழு​வதும் சட்​டம்-ஒழுங்கு சீர்​குலைந்​திருக்​கும் சூழலில், பொய் வழக்கு புனைந்து நாதக நிர்​வாகி​களைக் கைது செய்​திருப்​பது தவெக அரசின் கீழ்த்​தர​மான அரசி​யலை வெளிப்​படுத்து​கிறது. முன்​னாள் முதல்​வர்​கள் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நீங்​கள் பயந்து நடுங்​கிய காலத்​தில், அவர்​களை எதிர்த்து நின்று அரசி​யல் செய்து சண்​டை​யிட்​ட​வர்​கள் நாங்​கள். இந்த ஆட்​சி​யும், அதி​கார​மும் வீழும் நாள் வெகுதொலை​வில் இல்லை.

பாமக தலை​வர் அன்​புமணி, தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா. அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி, எஸ்டி​பிஐ மாநில பொறுப்​புத் தலை​வர் உமர் பாரூக் உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT