கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள். | படம்:எம்.முத்துகணேஷ் |

 
தமிழகம்

தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: நாளை தீபாவளி பண்​டிகையைக் கொண்​டாட சென்​னை​யில் இருந்து 16 லட்​சம் பேர் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர். இத​னால் பேருந்து, ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோதி​யது.

தமி்ழகத்​தில் தீபாவளி பண்​டிகை நாளை கொண்​டாடப்​படு​கிறது. சென்​னையைப் பொறுத்த வரை பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள்​அதிக எண்​ணிக்​கை​யில் வசித்து வரு​கின்​றனர். அவர்​கள் சென்​னை​யில் தங்கி வியாபாரம் உள்​ளிட்ட பல்​வேறு வர்த்​தகப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

ஏராளமான மாணவர்​களும் தங்கி தங்​கள் படிப்​பைத் தொடர்ந்து வரு​கின்​றனர். அது​மட்​டுமின்றி அலு​வல​கம் உள்​ளிட்​ட​வற்​றில் ஏராளமானோர் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​கள் பொங்​கல், தீபாவளி மற்​றும் கோயில் திரு​விழாக்​கள் உள்​ளிட்ட விசேஷ நாட்​களில் குடும்​பத்​துடன் தங்​கள் சொந்த ஊருக்​குச் செல்​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளனர்.

நாளை தீபாவளி பண்​டிகை கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில், ஒரு நாளுக்கு முன்​பாக இன்றே தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் செல்ல வேண்​டும் என்று தூத்​துக்​குடி, குமரி, நெல்லை, மதுரை உள்​ளிட்ட தென்​மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​களும், கோவை, சேலம் உள்​ளிட்ட மேற்கு மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​களும் திட்​ட​மிட்​டனர்.

சொந்த ஊர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்படாத ரயிலில் பயணம் செய்ய மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |

இதன் காரண​மாக நேற்று காலை முதலே சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம் உட்​பட முக்​கிய ரயில் நிலை​யங்​களி​லும், கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம், மாதவரம் என பேருந்து நிலை​யங்​களி​லும் மக்​கள் கூட்​டம் அலைமோதி​யது. மேலும் பலர் தங்​கள் சொந்த வாக​னங்​களில் புறப்​பட்​ட​தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

சொந்த ஊர்​களுக்​குச் செல்​லும் மக்​களுக்​காக ஆண்​டுதோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் நவ.5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

சென்னை கிளாம்​பாக்​கம் பேருந்து முனையம் தவிர கிளாம்​பாக்​கம் சிஎம்​டிஏ காலநிலை பூங்கா அரு​கில் உள்ள திறந்த வெளி இடம் மற்​றும் மறைமலை நகர் என 2 இடங்​களில் தற்​காலிக பேருந்து நிலை​யங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மேலும் கோயம்​பேடு, மாதவரம் என மொத்​தம் 5 இடங்​களில் இருந்து பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

தீபாவளியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய பயணிகள் கூட்டம். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்​னை​யில் இருந்து தினமும் 2,191 பேருந்​துகள் இயக்​கப்​படும் நிலை​யில், நேற்று முன்​தினம் நவ.5-ம் தேதி கூடுதலாக 1,018 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன. நேற்று முன்​தினம் இயக்​கப்​பட்ட 3,209 பேருந்​துகளில் மொத்​தம் 1.40 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர்.

நேற்று சென்​னை​யில் இருந்து பல்​வேறு ஊர்​களுக்கு மொத்​தம் 5,000-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​பட்டு, 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் மேற்​கொண்​ட​தாகப் போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அதன்​படி கடந்த 2 நாட்​களில் அரசு பேருந்​துகளில் மட்​டும் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குப் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர்.

ரயில்​களி​லும் பொது​மக்​கள் கடந்த வியாழக்​கிழமை முதல் செல்ல தொடங்​கினர். வழக்​க​மான விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு செய்ய முடி​யாதவர்​கள், சிறப்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்து, சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டனர்.

மேலும், விரைவு ரயில்​களில் முன்​ப​தி​வில்​லாத பெட்​டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக, சென்​னை​யில் இருந்து தென், மத்​திய, மேற்கு மாவட்​டங்​களுக்கு புறப்​பட்ட அனைத்து ரயில்​களும் நிரம்பி வழிந்​தன. நேற்று முன்​தினம் ஒரு லட்​சம் பேரும், நேற்று ஒன்​றரை லட்​சம் பேரும் பயணம் செய்​தனர். கடந்த 2 நாட்​களில் 2.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் செய்து உள்​ளனர்.

இது தவிர தனியார் ஆம்னி பேருந்​துகளில் 2 லட்​சம் பேர், கார்​கள், இரு சக்​கர வாக​னங்​களில் என லட்​சக்​கணக்​கானோர் தங்​களது பயணத்தை தொடங்​கினர். கடந்த 2 நாட்​களில் அனைத்து வித​மான போக்​கு​வரத்​துச் சேவை​கள் வாயி​லாக 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT