வாழ்வு இனிது

தொடரும் மீசை புராணம்

ப. தியாகராசன்

தஞ்சாவூர்க் கவிராயர் சொல்ல மறந்த இரண்டு மீசைக்காரர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன், மற்றொருவர் ஹிட்லர்.

‘துடிக்கிறது மீசை’ என்கிற வீரபாண்டிய கட்டபொம்மனின் வசனம், அந்தக் காலத்தில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பேசப்பட்டது.

அவ்வாறே, மூக்குக்குக் கீழ் சிறிய மீசை வைத்துள்ளவர்களை, ‘ஹிட்லர் மீசை’ என்று சொல்வதுண்டு.

மீசை எனும் சொல் ‘மிசை’ என்கிற சொல்லின் திரிபு. மேல் நோக்கியிருப்பதுதான் மிசை.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்’ என வள்ளுவர் ஒரே குறளில் சுட்டியுள்ள இரு மிசைகளைக் காணலாம்.

அதன் பொருட்டே, தமிழாக வாழ்ந்த மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் மேல் நோக்கிய மிசை வைத்துக்கொண்டு, மிடுக்காகத் தோற்றமளித்தார்.

- ப. தியாகராசன், விடையல் கருப்பூர்

SCROLL FOR NEXT