வணிக வீதி

இலங்கைக்கு இந்திய கார் ஏற்றுமதி பாதிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் கார்களை இறக்குமதி செய்யும் அண்டை நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது. தற்போது அந்நாடு இறக்குமதி கார்களுக்கான சுங்க வரியை அதிகரித் துள்ளது. இதனால் இந்திய கார் ஏற்று மதி பாதிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப் படுகின்றன. சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள ஆலையிலிருந்து இலங்கைக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறது ரெனால்ட். கடந்த நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கார் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 2,100 கோடி யாகும்.

தற்போது அந்நாட்டு அரசு கார் களுக்கான சுங்க வரியை 150 சத வீதத்திலிருந்து 175 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இலங்கையில் கார் களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2015-ம் ஆண்டில் இந்தியா விலிருந்து 28 ஆயிரம் கார்கள் இறக்கு மதி செய்யப்பட்டன. இது கடந்த நிதி ஆண்டில் 1.15 லட்சமாக அதிகரித்தது.

கார்களை இறக்குமதி செய்வதற் குப் பதிலாக இலங்கையில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கு இலங்கை அழைப்பு விடுத் துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இலங்கையில் ஆலை அமைக்காவிடினும் அங்கு அசெம் பிளி பிளான்ட் அமைக்கலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இறக்கு மதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரி விக்கின்றனர்.

சீன கார் தயாரிப்பு நிறுவனமான ஜீலி, இந்தியாவின் மாருதி சுஸுகி நிறு வனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான கார்களை இலங்கையில் விற்பனை செய்கிறது. உள்நாட்டு சந்தையைப் பிடிக்கும் நோக்கில் தற்போது இலங்கையில் அசெம்பிளி பிளான்ட்டை அமைத் துள்ளது. சமீபத்தில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனமும் அங்கு அசெம்பிளி பிளான்ட் அமைக்கப் போவதாக அறி வித்துள்ளது. இந்நிலையில் மாருதி சுஸுகி நிறுவனமும் இலங்கையில் அசெம்பிளி பிளான்ட் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவ தாக நிறுவனத் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

சுங்க வரியை அதிகரித்துள்ள இலங்கை அரசு, கார்களில் ஏர் பேக்குகள் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என புதிய விதிமுறையை போட்டுள்ளது. இதனால் கார்களின் உற்பத்தி விலை அதிகரிக்கும். இந்நிலையில் சுங்க வரி உயர்வால் கார் விலை அதிகரிக்கும். இது விற்பனையை பாதிக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசு சுங்க வரியை உயர்த்தி இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஏற்கெனவே சீன நிறுவனங்கள் அங்கு அசெம்பிளி ஆலை அமைத்துள்ளதால், இந்திய நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தென்னிந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணை இயக்குநர் ஜெனரல் சுகதோ சென் தெரிவித்தார்.

இலங்கை அரசு இறக்குமதியைக் குறைக்கவும், தங்கள் நாட்டிலேயே அசெம்பிளி ஆலை அமைப்பதை ஊக்குவிக்கவும் தொடர்ந்து நட வடிக்கை எடுக்கும். இந்நிலையில் இலங்கையில் தங்களுக்குள்ள முன்னி லையை இந்திய நிறுவனங்கள் இழக்காமல் இருக்க வேண்டுமானால், அங்கு அசெம்பிளி ஆலையை அமைப் பதுதான் தீர்வாக இருக்கும்.

SCROLL FOR NEXT