வணிக வீதி

கூகுள் தேடலில் பி.வி.சிந்து

செய்திப்பிரிவு

இன்றைய நாளில் கூகுள் தேடுதளம் இல்லாமல் எந்த தகவலையும் பெறமுடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். எது பற்றிய தகவல் வேண்டுமானாலும் பக்கம் பக்கமாக நமக்கு கூகுள் வழங்கி வருகிறது. ஆனால் ஏதாவது ஒன்றை பற்றிய தேடல் கூகுள் தளத்தில் பிரபலமாக இருக்கும். எந்த நபர் பற்றி அதிகம் தேடப்பட்டுள்ளது, எந்த நிகழ்வு பற்றி அதிகம் தேடப்பட்டுள்ளது, எந்த செய்தி அதிகம் தேடப்பட்டுள்ளது என்பது பற்றி ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிடும். இந்த வருடத்திற்கான பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதிகமாக கூகுளில் தேடப்பட்ட நபர்களில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்டு ட்ரம்ப், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள்

* டொனால்டு ட்ரம்ப்

* பி.வி.சிந்து

* தீபா கர்மாகர்

* திஷா பதானி

* எம்.எஸ்.தோனி

2016-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட செய்தி நிகழ்வுகள்

* ரியோ ஒலிம்பிக்ஸ்

* அமெரிக்க தேர்தல்

* பிரெக்ஸிட்

* 7-வது ஊதியக் குழு

* ஆட்டோ எக்ஸ்போ 2016

SCROLL FOR NEXT