வங்கியை சார்ந்து இயங்காமல் நம்மால் ஒரு நாள் இருக்கமுடிவதில்லை. அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவேதான் நடைபெறுகிறது. தற்போது பணமதிப்பு நீக்கம் அறிவித்த பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளை வங்கிகள் கிட்டத்தட்ட அசுர வேகத்தில் சமாளித்து வருகின்றன. இந்திய வங்கி அமைப்புக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இந்திய வங்கியின் வரலாறு அதன் அடிப்படை கட்டமைப்புகளை பற்றியும் சில தகவல்கள்…
டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி
அந்நிய செலாவணி கையிருப்பு 3,63,874.60 மில்லியன் டாலர்
தங்கம் கையிருப்பு
1,369.30 பில்லியன் (ரூபாய்)
இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள வங்கி கிளைகளின் எண்ணிக்கை 47,443
ரிசர்வ் வங்கியின் வரலாறு
1926 ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் பைனான்ஸ் என்ற பிரிட்டிஷ் குழுவின் பரிந்துரையில் தான் ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்கு பின் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க இந்த குழு அமைக்கப்பட்டது.
1935 ஏப்ரல் 1-ம் தேதி கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.
1937 மும்பையை தலைமை இடமாக கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.
1947 1937-ல் மியான்மர், இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னரும், 1947 வரை மியான்மரின் தலைமை வங்கியாக இது செயல்பட்டது.
1949 சுதந்திரத்துக்கு பிறகு ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப் பட்டது.
இதுவரை ரிசர்வ் வங்கிக்கு பெண் கவர்னர் பொறுப்பு வகித்ததில்லை.
பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்தியா முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 49,755
பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 16,500
தற்போது இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 27
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு உள்ள வங்கி கிளைகள் 13
இதில் 19 வங்கிகள் தேசிய வங்கிகளாகவும், 6 வங்கிகள் பாரத ஸ்டேட் மற்றும் அதன் குழுமங்கள், 2 வங்கிகள் மற்ற பொதுத்துறை வங்கிகளாகவும் உள்ளன.
ஆனால் கொலாம்பியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 257 வங்கி கிளைகள் உள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி
1806-ல் கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கி இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகள் இவ்வங்கி மூலமே நடைபெறுகின்றன.
இவ்வங்கி கல்கத்தா வங்கி எனத் தொடங்கப்பட்டு இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின் பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது.
38% நகர்புறங்களில் உள்ளன
34% கிராமப்புறங்களில் உள்ளன